அண்ணா பல்கலைக்கழக 42 வது பட்டமளிப்பு விழா

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42 வது பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்கள். திருவாரூர் மாவட்டம் கோவில்வென்னி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பயின்ற மாணவி ஏ.எஸ்.எஸ்தர் நிவேதிதா பி.டெக் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை அனைவரும் பாராட்டினார்கள். இவருடைய தந்தையார் ஆர். அருள் கமலகுமார் எம்.இ. ஓய்வு பெற்ற பேராசிரியர், இவருடைய தாயார் ஸ்நேகலதா பல பட்டங்கள் பெற்ற இல்லத்தரசி, இவருடைய மூத்த சகோதரி ஏ.எஸ்.நிவேதா ஜெனிபர் சர்வதேச நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினியராக பணிபுரிகிறார். தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஏ.எஸ்.எஸ்தர் நிவேதிதாவை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள்

tamilexpress

tamilexpress

Leave a Reply

Your email address will not be published.