ஏ.ஆர்.சி. இன்டர்நேஷனல் பெர்ட்டிலிட்டி மற்றும் ஆராய்ச்சி மையம், ஏ.எல்.எம் ஆயுஷ் வெல்னஸ் சென்டரின் நிறுவனர்கள் மருத்துவர் லக்ஷ்மணன் சரவணன் மற்றும் மருத்துவர் திருமதி மஹாலஷ்மி சரவணன் தம்பதியினரின் புதல்வி மருத்துவர் புரமோதிதா விற்கும் கோயம்புத்தூர் மருத்துவர் ஏகாம்பரகிருஷ்ணன் மருத்துவர் ரேவதி ஏகாம்பரம் தம்பதியினரின் புதல்வன் மருத்துவர் அருண் பூர்னேஷ்க்கும் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மருத்துவ பிரபலங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் உயர்தர அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது